தற்போதைய செய்திகள்

மாண்டஸ் புயலின் ருத்ர தாண்டவம் | அறுந்து விழுந்த மின்சார வயர் | பலியான இளைஞர்கள்

தந்தி டிவி

மாண்டஸ் புயல் எதிரொலியாக ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வடமாநில இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் உள்ள தனியார் மழலை பள்ளி அருகே, மாண்டஸ் புயலின் தாக்கத்தினால் மரம் ஒன்று முறிந்து மின்சார கம்பத்தின் மீது சாய்ந்தது. இதனால் சாலையில் அறுந்து விழுந்த மின்சார வயரினை இரவில் அவ்வழியே சென்ற 2 வட மாநில இளைஞர்கள் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிகாலையில் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்