தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி விலை உயர்வை தொடர்ந்து வெள்ளை பூண்டு விலையும் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்ட சந்தைகளில் நாட்டு பூண்டு கடந்த வாரங்களில் கிலோ120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு கிலோ பூண்டும் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், மலைப்பூண்டு கிலோ 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததன் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விலை உயர கூடும் என்பதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.