தற்போதைய செய்திகள்

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு... அரசு அலுவலகங்களில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

தந்தி டிவி
• தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் , 33 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். • தமிழகம் முழுவதும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சில அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலின்பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். • பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்து துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வணிகவரித்துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றைச் சார்ந்த 60க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. • இதில், கணக்கில் காட்டப்படாத பல லட்சக்கணக்கான ரொக்கப் பணம், கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்டது. • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் தனிநபருக்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்