தற்போதைய செய்திகள்

10 நிமிடத்தில் 37 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Evening News | Speed News (03.04.2023)

தந்தி டிவி
• இன்று நடைபெறும் அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். • இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
• 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வெற்றி கூட்டணி தயாராகிக் கொண்டிருப்பதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக, பாஜக உடனான கூட்டணியில் தமாகா இருப்பதாக தெரிவித்தார்.
• தமிழக சட்டப்பேரவையில், வரும் 6-ம் தேதி, சிறுதொழில் செய்பவர்கள் பயன் பெறும் வகையில் 41 அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். • மேலும், வருமான வரி கட்டுபவர்கள், அரசுத்துறையில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம், மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாயை கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
• ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டியில் மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது. • பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. • பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

BREAKING || தலையில்லா உடல் - குற்றவாளிகள் சிக்கியது எப்படி? - போலீசின் மிரட்டல் ஸ்கெட்ச்

Breaking | Driver | Govt Bus | ``கிராமங்களுக்கு புது ரூட்.. டிரைவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு''

CM Vijay | TN Govt | TVK | அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Transformer | TNEB | Scam | மெகா ஊழல்..? பரபரப்பு திருப்பம்.. உள்ளே வரும் நாட்டின் பவர்புல் அமைப்பு

Breaking | Perambur Crime | கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய பயங்கரம் | திடுக்கிடும் பின்னணி