தற்போதைய செய்திகள்

உலக சாம்பியன் கார்ல்சனை தட்டி தூக்கிய தமிழக வீரர் - புதிய சாதனை படைத்து அசத்தல்

தந்தி டிவி

உலக சாம்பியன் கார்ல்சனை தட்டி தூக்கிய தமிழக வீரர் - புதிய சாதனை படைத்து அசத்தல்

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழக இளம் வீரர் குகேஷ் தோற்கடித்து உள்ளார்.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் தொடரின் ஒரு பகுதியாக எய்ம்செஸ் ரேபிட் (Aimchess Rapid) செஸ் தொடர் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த தொடரின் 9ம் சுற்றுப் போட்டியில் நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது வீரர் குகேஷ் மோதினார். இதில் வெள்ளை நிறக் காய்களில் ஆடிய குகேஷ், 29வது நகர்த்தலில் வெற்றி பெற்று கார்ல்சனுக்கு அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம், கார்ல்சனை மிக இளம் வயதில் தோற்கடித்த வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்து உள்ளார். முன்னதாக மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசியிடமும் கார்ல்சன் தோற்றது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்