தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் வாபஸ்

தந்தி டிவி

சென்னையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர், தங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சென்னை சேப்பாக்கத்தில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வந்தனர். அவர்களை அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் கீதாஜீவன் 15 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், மீதமுள்ள 5 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்குவதாக சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் 32 மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை ஒரு மாதத்தில் நிறைவேற்றவில்லை என்றால், போராட்டத்தை அறிவிப்போம் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்