தற்போதைய செய்திகள்

"தமிழக ஆளுநர் அரசியல்வாதியாக செயல்படக்கூடாது" - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து

தந்தி டிவி

தமிழக ஆளுநர், அரசியல்வாதியாக செயல்படக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து முடிவுகளிலும் பாஜகவுக்கு எதிராக பேசும் திமுக., என்.எல்.சி. விவகாரத்தில் மட்டும் தமிழகத்தின் அழிவுக்கு பாஜகவுடன் கூட்டு வைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். கடந்த 66 ஆண்டுகளில் என்.எல்.சி.யால் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், இதுதொடர்பான பாதிப்புகளை அறிய, ஐ.ஐ.டி. குழு ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். தமிழக ஆளுநர், அரசியல் வாதியாக செயல்படக்கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

CM Vijay | TN Assembly | குறுக்கீடு இல்லாமல்.. CM விஜய் அதிரடி அறிவிப்புகள்.. வெளியான உற்சாக செய்தி

Breaking | CM Vijay | "I'm Sorry.." சாரி கேட்ட CM விஜய்.. அவையே கப்சிப்.. நடந்தது என்ன..?

Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட் - சல்லடை போட்டு தேடப்படும் IPS அதிகாரியின் சகோதரர்

🔴LIVE : TNAssemblyLive | CM Vijay | DMK | 3 தமிழர்கள் சுட்டுக் கொலை - பேரவையில் வெடிக்கும் பூகம்பம்

Cauvery | Hogenakkal | பொங்கிவரும் காவிரி | ஒகேனக்கலில் தெரிந்த மாற்றம்