தற்போதைய செய்திகள்

செல்போனில் டார்ச்சர் செய்த இளைஞர்... திட்டம் தீட்டி போட்டுத்தள்ளிய பெண் - பழிக்குப்பழியாக தாய்,தந்தைக்கு நேர்ந்த சோகம்?

தந்தி டிவி
• சென்னை வண்டலூர் அருகே, மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ஜனகா ஆகிய இருவரும் சேர்ந்து, வண்டலூர் அடுத்த ஓட்டேரி அருகே மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். • காரில் வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல், தாங்கள் வைத்திருந்த கத்தியால் பார்த்திபன் மற்றும் ஜனகா ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். • இதில், பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜனகாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். • இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், பார்த்திபனின் 15 வயது மகளை, மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. • இதன் காரணமாக, பார்த்திபனின் மகள் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, பிரேம்குமாரை கொலை செய்ததால், பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்