தற்போதைய செய்திகள்

சத்து மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவிகள்...சிகிச்சைக்கு செல்லும் போது பாதியில் பிரிந்த உயிர் - வினையான விளையாட்டு..!

தந்தி டிவி
• ஊட்டியில் விளையாட்டாக சத்துமாத்திரையை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் கடந்த 6ம் தேதி குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து கொண்ட ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. • ஒருவருக்கு ஒரு மாத்திரை என வழங்கப்பட்ட நிலையில், பள்ளியில் சில பேருக்கு அதிகமான மாத்திரைகள் கிடைத்துள்ளது. • அப்போது, மாணவ மாணவிகள் சிலர், விளையாட்டாக போட்டி போட்டுக் கொண்டு, அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். • இதனால் 6 மாணவ மாணவிகள் மயக்கமடைந்தனர். • இதனையடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. • இந்நிலையில் உடல் நிலை மிகவும் மோசமடைந்த ஜெய்பா பாத்திமா என்ற 8ம் வகுப்பு மாணவி அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். • அப்போது ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே சேலம் அருகே, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை