தற்போதைய செய்திகள்

சென்னையில் இருந்து பெங்களூருக்கு பேரணியாக செல்லும் ஸ்விகி ஊழியர்கள்

தந்தி டிவி

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனமான ஸ்விகியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலிருந்து பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடை பயணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் சென்றனர். அப்போது அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது :

கடந்த திங்கட்கிழமை முதல் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம்

எங்களது சம்பளத்தை புதிய திட்டத்தில் கொண்டு வந்து கொடுக்க முயற்சி செய்கிறார்கள் பழைய முறையில் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம்

இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை எங்களது தலைமை அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது அங்கு சென்று எங்கள் கோரிக்கை வைத்தும் ஏற்கவில்லை தற்போதுள்ள புதிய முறையில் தான் வேலை பார்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எங்களுக்கு பழைய முறையில் வேலை முறை கொடுக்க வேண்டும்

முகம் தெரியாத முதலாளியிடம் வேலை செய்யும் போது பெங்களூரில் உரிமையாளர் இருப்பதாக வந்த தகவலையடுத்து அவரை சந்தித்து சொல்வதற்காக தற்போது நடை பயணமாக பெங்களூர் செல்கின்றோம்

பழைய நடை முறையில் காலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை வேலை செய்யும் போது குறிப்பிட்ட தொகை வரும் தற்போது புதிய நடைமுறையில் பகுதி நேரமாக பார்ப்பவர்களுக்கும், முழு நேரமாக பார்ப்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்கிறார்கள்

நாள் ஒன்றுக்கு இத்தனை உணவு டெலிவரி செய்தால் குறிப்பிட்ட தொகை சம்பளமாக தருவதாக கூறுகின்றனர். இது தங்களுக்கு ஏற்றது போல் இல்லை இதனால் ஊழியர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நிறுவனத்தை விட்டு வெளியேற போகிறோம்

பழைய ஆப் நடைமுறையில் வர வேண்டும் புதிய ஆப் வரக்கூடாது என தெரிவித்தனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி