தற்போதைய செய்திகள்

"துபாய் சென்ற பினராயி.. பையில் கட்டுக்கட்டாக கரன்சி" - தங்க கடத்தல் ஸ்வப்னா பகீர் வாக்குமூலம்

தங்கக் கடத்தலில், முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, ஜாமினில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

கடந்த 2020 ஆம் ஆண்டு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில், முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். ஜாமினில் உள்ள அவர், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், ரகசிய வாக்குமூலம் அளிப்பதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து, எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில், ரகசிய வாக்குமூலம் அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அனைத்தையும் கூற முடியாது என்றும், 2016ல் துபாய் சென்ற முதல்வர் பினராயி விஜயன், பையை விட்டுச் சென்றதாகவும், அதை துபாயில் டெலிவரி செய்ததாகவும் கூறினார். அந்தப் பையில் கரன்சி இருந்ததாகவும், துணைத் தூதரகத்திலிருந்து பிரியாணி பொட்டலங்கள், கிளிஃப் ஹவுஸில் ஒப்படைக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாகவும் கூறிய ஸ்வப்னா, இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது என்றார். ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்