தற்போதைய செய்திகள்

விபத்தில் காயமடைந்தவருக்கு காலில் தையல் - திடீரென காலில் ஏற்பட்ட பயங்கர வலி - எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

பெருங்குடி ஆவணம் பகுதியை சேர்ந்த மதிவாணன் என்பவருக்கு ஏற்பட்ட சாலை விபத்தை தொடர்ந்து, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

மதிவாணனின் கனுக்காலில் தையல் போட்டுள்ளனர். மருத்துவர் போடாமல் ஊழியர்கள் போட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி இந்துள்ளது.

இதனையடுத்து அவர் அறந்தாங்கி தனியார் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, தையல் போட்ட பகுதியின் உள்ளே, 3 கல் துகள்கள் இருந்தது தெரியவந்தது.

விபத்தில் சிக்கியபோது தரையில் கிடந்த கற்கள் காலின் உள்ளே போயிருந்ததை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சுத்தம் செய்யாமல் தையல் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதிவாணனுக்கு தனியார் மருத்துவமனையில் ஆபரேசன் செய்து கற்களை அகற்றினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்