தற்போதைய செய்திகள்

மனைவி மீது சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்…குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை முயற்சி

தந்தி டிவி

திருமணமாகி முதன்முறையாக மனைவி குழந்தை பிரசவித்தால்… வாரிசு பிறந்த சந்தோஷத்தில் தன்னுடைய குழந்தையை தூக்கி கொஞ்சம் தந்தையைதான் நாம் பார்த்திருப்போம்…. ஆனால், அந்த சந்தோஷம் இங்கொரு தந்தைக்கு சந்தேகமாக மாறி சொந்த குழந்தையையே கொலை செய்ய தூண்டியிருக்கிறது… பிரீத் (குழந்தை புகைப்படம் + த்ரில் ஆடியோ+ குழந்தை அழுகும் ஆடியோ) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ளது தேவி செட்டி குப்பம் கிராமம்… இந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். சென்னை தாம்பரம் airforce canteen-இல் வேலைப்பார்த்து வந்துள்ளார்…

மணிகண்டனுக்கு முப்பது வயதாகியும் சரியான வரன் எதுவும் அமையவில்லை… மணிகண்டனின் குடும்பத்தினரும் சொந்த பந்தம், பக்கத்து ஊர் என வலைவீசி பெண் தேடியிருக்கிறார்கள். அப்போதுதான் ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை மணிகண்டனுக்கு பேசி முடித்திருக்கிறார்கள். பெரியவர்கள் சம்மதத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மணிகண்டன் ஹேமலதாவிற்கு அமோகமாக திருமணமும் நடந்துள்ளது.. தனக்கு பிடித்தபடியே வாழ்க்கை துணை அமைந்துவிட்ட சந்தோஷத்தில் மணிகண்டனும் ஹேமலதாவை சந்தோஷமாக கவனித்து வந்துள்ளார்… திருமணம் முடிந்த அடுத்த மாதமே ஹேமலதா கர்பமடைந்து கணவருக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார். கணவர் உள்பட ஒட்டுமொத்த குடும்பமும் வாரிசு பிறக்கபோகிற சந்தோஷத்தில் ஹேமலதாவை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்கிறார்கள்..

மணிகண்டன் வாழ்க்கையில் அடுத்தடுத்து குட் நியூஸ் வந்து கொண்டிருந்த போது தான், அவரின் நிம்மதிக்கு கொல்லி வைத்திருக்கிறது ஒரு பேட் நியூஸ். ஹேமலதா ஒன்பது மாதத்திலேயே குறை பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றிருக்கிறார். இந்த செய்தியை அனைவரும் ஸ்வீட்டுடன் செலிபிரேட் செய்து கொண்டிருந்தபோது மணிகண்டன் மட்டும் துக்கத்தில் மூழ்கிபோயிருக்கிறார்… ஒன்பது மாதத்திலேயே குழந்தை பிறந்தது மணிகண்டனுக்கு ஹேமலதா நடந்தை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருமணத்திற்கு முன்பே ஹேமலதா கர்பமடைந்திருப்பாரோ என்ற தனக்குள்ளேயே மனக்கணக்கு போட்டிருக்கிறார்… ஆனால், குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது என்பது மணிகண்டனின் மூளைக்கு விளங்கவில்லை… அந்த அறியாமையிலேயே குழந்தையை பார்த்திருக்கிறார்… குழந்தையின் முக ஜாடையும் மணிகண்டனின் போல் இல்லாதது மேலும் அவரது சந்தேகத்தை வலுவடைய செய்திருக்கிறது. ஹேமலதாவிற்கு பிறந்தது தன்னுடைய குழந்தை இல்லை என்பதை ஆணித்தரமாக நம்பியிருக்கிறார்… அந்த சந்தேகமே ஒருகட்டத்தில் மணிகண்டனை சைக்கோவாக மாற்றியிருக்கிறது… சம்பவத்தன்று குழந்தை மற்றும் மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார் மணிகண்டன். அப்போது மாமனார் மாமியார் வெளியில் சென்றிருந்த நிலையில் ஹேமலதாவும் கிச்சனில் வேலை செய்துக்கொண்டிருந்தார்… அறையில் குழந்தை மட்டும் தனியே இருந்துள்ளது. கிடைத்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட மணிகண்டன் கையில் வைத்திருந்த பிலேடால் குழந்தையின் கழுத்து மற்றும் கையை அறுத்திருக்கிறார்.

வலி தாங்க முடியாமல் குழந்தை அலற சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியிருக்கிறார் மணிகண்டன்… பிறகு அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஹேமலதா ரத்தவெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மணிகண்டனை தேடி வருகின்றனர்…

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு