தற்போதைய செய்திகள்

"வாடிவாசல் படத்தில் நடிக்க ஆள் தேவை"... Google Pay -யில் பணம் அனுப்பினால் வாய்ப்பு - நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கும்பல்

தந்தி டிவி

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் 'வி' கிரியேஷன் என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

தற்போது இந்த நிறுவனம் நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் நடிக்க துணை நடிகர்கள், நடிகைகள் தேவைப்படுவதாகவும், விருப்பமுள்ளவர்கள் கூகுள் பே மூலமாக பணம் செலுத்துமாறும் போலி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பி பலரும் ஆன்லைனை் மூலமாக பணத்தை செலுத்திய நிலையில், தியாகராய நகரில் உள்ள கலைப்புலி தாணுவின் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்தபோது, 2 மர்மநபர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் இணை இயக்குனர் ஜெகதீசன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..