தற்போதைய செய்திகள்

அதிமுக விதிகளில் திருத்தம்..! - ஈபிஎஸ்-ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு... - உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தந்தி டிவி
• அதிமுக விதிகளில் திருத்தம் தொடர்பாக, இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கை மூன்று வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. • இது தொடர்பான மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. • அப்போது, மனுதாரர் கே.சி. பழனிசாமி தரப்பில், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது. • இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரிட் மனு தள்ளுபடி செய்யும் நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. • இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், கே.சி. பழனிசாமியின் மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி