தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் திடீரென பாய்ந்த மின்சாரம் - உணவக ஊழியர் பரிதாப பலி

தந்தி டிவி

உணவகத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிஸ்வா சாதன் ஜமாத்தியா.

இவர் சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில், அவர் பாத்திரங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து முதலதுவி சிகிச்சை அளிக்க வந்தவர்கள், அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

பின்னர் அவர் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி