தற்போதைய செய்திகள்

முக்கிய சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம் - பூந்தமல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

தந்தி டிவி

கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஆங்காங்கே பில்லர்கள் அமைக்கும் பணிக்காக தடுப்புகள் வைத்து வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லி பஸ் நிலையம் செல்லும் பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் திடீரென பத்தடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் விழுந்ததால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளானார்கள். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த ஊழியர்கள் வாகனங்கள் செல்லாத வகையில் சாலையில் தடுப்புகள் அமைத்தும் பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்பி வருகின்றனர். திடீரென சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் தற்போது பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் நசரத்பேட்டை வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பூந்தமல்லி பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்காக முக்கிய சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..