தற்போதைய செய்திகள்

கிரிக்கெட் விளையாடிய போது திடீர் நெஞ்சுவலி - பரிதாபமாக பிரிந்த சிறுவன் உயிர்

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வானவாடி பகுதியை சேர்ந்த வேதாந்த் சிவ்ஜி என்ற 14 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நெஞ்சு வலிப்பதாக சிறுவன் கூறியதால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சமீப காலமாக மாரடைப்பால் பலர் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த14 வயது சிறுவனின் மரணம், இளம் வயது மரணங்கள் குறித்த கவலையை அதிகரித்து உள்ளது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..