தற்போதைய செய்திகள்

"Fees கட்ட மறந்த கல்லூரி".. தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்- திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், ஆண்டு கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரி வாசல் முன்பாக திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குறைந்த அளவிலான ஆசிரியர்களே இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, தேர்வு கட்டணம் செலுத்தியும் தங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி நிர்வாகம் பணம் செலுத்தாத காரணத்தினால்தான் ஹால் டிக்கெட் தரப்பிடவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்