தற்போதைய செய்திகள்

ஆசிரியருடன் 'ஜுட்' விட்ட +2 மாணவி..! - ஜோடியாய் போலீசில் சரண்... பெண்ணின் பெற்றோர் எடுத்த முடிவு..!

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்தவர் ராஜன் ஆண்டனி போஸ். 32 வயதான இவர், அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதில், பொதுத் தேர்வு முடித்து விட்டு கல்லூரி சேர இருந்த மாணவியுடன் ஆசிரியர் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில், ஆசிரியரும், மாணவியும் நாகர்கோவில் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த தகவலறிந்து காவல்நிலையம் வந்த இரு வீட்டாரிடமும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலில் படிக்க வைப்பதாகவும், அதன் பின்பு ஆசிரியருக்கே திருமணம் செய்து வைப்பதாகவும் மாணவியின் வீட்டார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு வீட்டாரிடமிருந்து கடிதம் எழுதி வாங்கிய போலீசார், மாணவியை அவரின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்