கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி, காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான,
முதல்வர் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கண்ணூர் சென்ற முதல்வர் பினராயி விஜயன் வாகனத்திற்கு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டினர். இதற்காக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஃபர்ஹான் முண்டேரி கைது செய்யப்பட்டுள்ளார். தளிபரம்பூவில் முதல்வரின் பாதுகாப்புக்காக அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களில் முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.