தற்போதைய செய்திகள்

கெட்டிச் சட்னியோடு சேர்த்து கரப்பான் பூச்சியையும் கட்டி கொடுத்த கடை - பெற்றோர் அதிர்ச்சி

தந்தி டிவி

சேலத்தில் உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவத்தில் விளக்கம் கேட்டு ஓட்டல் நிர்வாகத்துக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில்தெருவை சேர்ந்தவர் சங்கர்.

இவர் தன் குழந்தைக்கு தனியார் ஓட்டலில் இருந்து இட்லியும் சட்னியும் வாங்கி வந்துள்ளார்.

இதில் தேங்காய் சட்னியை சாப்பிட திறந்து பார்த்த போது அதன் உள்ளே கரப்பான் பூச்சி கிடந்தது தெரியவரவே அதிர்ந்து போனார் அவர்.

உடனே கடைக்கு அதை எடுத்து வந்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சோதனைக்கு சென்றனர்.

அப்போது அங்கே கரப்பான் பூச்சிகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஓட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு