தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு...சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் - ஈபிஎஸ் இடையே அனல் பறந்த விவாதம்..!

தந்தி டிவி

குற்ற சம்பவங்கள் நடந்தால், திமுக ஆட்சி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக கார சார விவாதம் நடைபெற்றபோது, பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், சம்பவம் நடந்த உடன் திமுக ஆட்சியில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்டெர்லைட் விவகாரம் நடக்கும் பொழுது தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்னது போல் இல்லை எங்கள் ஆட்சி இல்லை என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆய்வு கூட்டத்தில் இருந்ததால், தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்போது கூறியதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து நிறைய பட்டியல் இருக்கிறது என்றும் வெளியிடுவேன் எனவும் துப்பாக்கி சூடு நடந்ததற்கு அனுமதி கொடுத்தது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்