தற்போதைய செய்திகள்

கோவில் திருவிழாவில் வெடித்த கலவரம்.. ஊருக்குள் குவிக்கப்பட்ட போலீஸ்...ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயம் அடைந்தனர். பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விட்டிலாபுரத்தில் ஒரு சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதே போல் அதன் அருகே உள்ள கொள்ளீர்குளம் கிராமத்தில் மற்றொரு சமுதாயத்துக்கு சொந்தமான கோவில் திருவிழாவும் நடந்து வருகிறது.

கொள்ளீர்குளம் கோவில் திருவிழாவிற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் விட்டிலாபுரம் ஊர் வழியாக கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது இருத்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு தரப்பினரும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் இரண்டு தரப்பைச் சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்