தற்போதைய செய்திகள்

ஊருக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்

தந்தி டிவி

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊருக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. இவருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பக்தவச்சலநகர் ரூபேஷ்குமார் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூபேஷ் குமார், தனது தந்தை முத்தையன், சகோதரர் மணிகண்டன், அக்கா கணவர் கணேஷ் குமார் ஆகியோருடன் பாடிச்சேரிக்கு சென்று நந்தினி குடும்பத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. ரூபேஸ்குமார் அழைத்து வந்த கும்பல் ஊருக்குள் புகுந்து இருசக்கர வாகனம், பிளாஸ்டிக் சேர் மற்றும் வீடுகளை அடித்து நொறுக்ககியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன கிராம மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரூபேஷ்குமார் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Breaking | Sriperumpudur Girl Missing | தமிழகத்தை பதறவிட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

Kerala Train | ரயிலை கவிழ்க்க 3 ஸ்பாட்டில் பிளான்? - பீகார் இளைஞர் பார்த்த வேலை.. கேரளத்தில் பகீர்

Dhanush's Chennai Meet | சென்னையில் தனுஷின் அடுத்த பிளான் - பிரமாண்ட Meet-Up.. வெளியான தேதி..

Weather Report | TN Rain Update | இன்று 22 மாவட்டங்களுக்கு.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்

Breaking | Naagai Case | TN Police | டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநர் உட்பட 2 போலீசார் அதிரடி மாற்றம்