தற்போதைய செய்திகள்

இலங்கை அகதி ராஜனை சிறப்புமுகாமுக்கு மாற்றும் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்

தந்தி டிவி
• இலங்கை அகதி ராஜனை சிறப்பு முகாமுக்கு மாற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 24 மணி கெடு விதித்துள்ளது. • கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜன், தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரிய மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். • இதற்கு மனுதாரர் தரப்பில் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. • தமிழ்நாடு அரசின் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள் 24 மணி நேரத்துக்குள் சிறப்பு முகாமுக்கு ராஜனை மாற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என தெரிவித்தனர். • இலங்கை அகதி ராஜன் முன் விடுதலை குறித்து மீண்டும் பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு மூன்று வாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 17 - ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்