தற்போதைய செய்திகள்

ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரவேண்டி சிறப்பு யாகம்..சித்தர் கோயிலில் ரசிகர்கள் வழிபாடு

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைக்காடர் சித்தர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூரில் உள்ள அந்த கோயிலில், மாதந்தோறும் பவுர்ணமியன்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருவதையொட்டி, சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், அந்தக் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, இடைக்காடர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டியும், அவருடைய படங்கள் வெற்றி பெற வேண்டியும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்