தற்போதைய செய்திகள்

"இதுவரை இப்படி இல்ல..." - தெற்கு ரயில்வேக்கு கோடி கோடியாய் கொட்டிய வருமானம்

தந்தி டிவி
• இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகள் ரயில் மூலம் 6 ஆயிரத்து 345 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது • . தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயை 2022-23 ஆம் நிதியாண்டில் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • பயணிகள் பிரிவில் 6 ஆயிரத்து 345 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 80 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. • பயணிகளின் வருகை 88 புள்ளி 5 விழுக்காடு உயர்ந்து, 640 மில்லியனாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. • இதே போன்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 6 விழுக்காடு அதிகரித்து, 37 புள்ளி 94 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், இதுவரை இல்லாத வகையில் 3 ஆயிரத்து 637 கோடி 86 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • இது கடந்த நிதி ஆண்டைவிட 30 விழுக்காடு அதிகம் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி