தற்போதைய செய்திகள்

10ல் 8 என தெறிக்கவிட்ட தென் இந்திய படங்கள் | வெளியானது IMDb-யின் டாப் 10 படங்கள் | IMDB | MOVIES

தந்தி டிவி

2022ம் ஆண்டில் வெளியான, டாப் 10 படங்களின் பட்டியலை, ரேட்டிங் தளமான ஐ.எம்.டி.பி. வெளியிட்டுள்ளது.

டாப் 10 படங்களின் IMDb பட்டியல்... ராக்கி பாய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த 'கே.ஜி.எஃப் 2' 3வது இடம்

இந்த பட்டியலில், ராஜமவுலி இயக்கத்தில், விருதுகளை வாங்கிக் குவித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான, 'தி காஷ்மீர் பைல்ஸ்' இரண்டாம் இடம் பிடித்துள்ள நிலையில், திரையரங்குகளில் ராக்கி பாய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த 'கே.ஜி.எஃப் 2' மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி, வசூலை வாரிக் குவித்த 'விக்ரம்' 4வது இடத்தை கைப்பற்றிய நிலையில், கன்னடத்தில் உருவாகி பெரிதும் பாராட்டப்பட்ட 'காந்தாரா' படம், இந்த பட்டியலில் 5வது இடத்தை பதிய வைத்தது. கல்கி காதலர்களின் 'பொன்னியின் செல்வன்' 9வது இடத்தை தனதாக்கி கொண்ட நிலையில், மாதவன் நடிப்பில் வெளியான 'ராக்கெட்ரி', துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்', கன்னடத்தில் வெளியான '777 சார்லி' ஆகிய படங்களும் தடம் பதித்துள்ளன. இதனால் டாப் 10 பட்டியலில், தென் இந்தியாவில் உருவான 8 படங்கள் இடம் பிடித்து தெறிக்க விட்டிருக்கின்றன.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’