தற்போதைய செய்திகள்

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

தந்தி டிவி

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனின் மகள் தூரிகை.. இவர் ஆங்கில நாளேட்டில் பத்திரிக்கையாளராகவும், திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தூரிகை நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக, முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?