தற்போதைய செய்திகள்

"தூங்கிய என்னை ஏன் எழுப்பவில்லை"என்று கேட்டு தந்தையை அடித்தே கொன்ற மகன் - கேரளாவில் பயங்கரம்

தந்தி டிவி

மதுபோதையில் நீண்ட நேரம் தூங்கிய தன்னை ஏன் எழுப்பவில்லை என கூறி தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜாய். இவரது மகன் ரிஜோ, சம்பவத்தன்று மதுபோதையில் நீண்ட நேரம் தூங்கியதாக தெரிகிறது. இதன்பின்னர், திடீரென எழுந்த ரிஜோ, அவரின் தந்தையிடம் சென்று நீண்ட நேரம் தூங்கிய தன்னை ஏன் எழுப்பவில்ல என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், தந்தைக்கும் மகனுக்கும் தகராறு முற்றிய நிலையில், தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ரிஜோவே காவல்நிலையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்