தற்போதைய செய்திகள்

தந்தையை ஆட்டோ ஏற்றி கொன்ற கொடூர மகன் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

விழுப்புரம் அருகே சொத்து தகராறு காரணமாக தந்தையை மகன் ஆட்டோ ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டக்குப்பம் அருகே குயிலாபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயியான இவருக்கும், இவரது மகன்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பெரியசாமியின் மகன்களான ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்படி, சாலையில் சென்று கொண்டிருந்த பெரியசாமி மீது அவரது மகன் முருகன் ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பெரியசாமியின் மகன் முருகனை போலீசார் கைது சிறையில் அடைத்த நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு மகன் ஈஸ்வரனை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்