தற்போதைய செய்திகள்

சென்னையில் ஸ்னூக்கர் போட்டி... கலக்கிய கோவை இளைஞர்

தந்தி டிவி

சென்னை பாலவாக்கத்தில் நடைபெற்ற ஸ்னூக்கர் இறுதிப்போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஷ் என்ற வீரர் வெற்றி பெற்றார். 3 நாட்கள் நடைபெற்ற போட்டித் தொடரில், தமிழகத்தை சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்றனர். இதில், சிறப்பு விருந்தினராக பத்மபூஷன் மற்றும் கேல் ரத்னா விருது பெற்ற சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியனான ஸ்ரீ பங்கஜ் அத்வானி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஸ்ரீ பங்கஜ் அத்வானி 25 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்னூக்கர் போட்டிகளுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Rangasamy | Vijay | `நண்பர்’ ரங்கசாமி முடிவை சொன்னதும் மறுநொடியே புயலாக கிளம்பிய விஜய்

NTK Seeman | திருத்தணியில் தேர்தல் பிள்ளையார்சுழி போடும் சீமான்

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,