தற்போதைய செய்திகள்

"மதிய உணவுத் திட்டத்தில் சிறு தானியங்கள்" "குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்" - சிறுதானிய கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு

தந்தி டிவி

மதிய உணவுத் திட்டத்தில் சிறு தானியங்களை சேர்ப்பதன்மூலம், குழந்தைகளின் உணவில் சுவையையும், ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...

டெல்லி பூசா வளாகத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸ்ரீ அன்னா திட்டத்தின் மூலம் சிறுதானியங்களுக்கு இந்தியா புதிய அடையாளத்தை வழங்கியிருப்பதாகவும், இத்திட்டம் ஏறத்தாழ இரண்டரை கோடி சிறு விவசாயிகளுக்கு ஆசீர்வாதமாக திகழும் என பெருமை தெரிவித்தார். சிறுதானியங்களில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியிருப்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன் அளிக்கக்கூடியது என தெரிவித்த பிரதமர், மதிய உணவுத் திட்டங்களில் சிறுதானியங்களை சேர்ப்பது நமது குழந்தைகளின் உணவில் சுவையையும், ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்கும் என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்