தற்போதைய செய்திகள்

அரசு வேலையென கூறி கொத்தடிமை வேலை... புளியமரம், தென்னை மரம் ஏறச்சொல்லி டார்ச்சர்....

தந்தி டிவி

அரசு வேலையே வாங்கி கொடுக்குறதா நம்ப வைச்சி, என்னய அதிகாரிங்க எல்லாருமா சேர்ந்து ஏமாத்திட்டாங்கன்னு அப்பாயின்ட் ஆர்டரோட அன்னைக்கு ராஜ்குமார் இடிஞ்சி போய் இருந்தாரு. என்ன நடந்துச்சு ? ஒருவேளை சோத்துக்கே கஷ்டப்படுற இந்த குடும்பத்த ஏமாத்துறதுக்கு அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சின்ற ? குழப்பத்தோட அவர் கையில வச்சிருந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்ல இருந்தே விசாரணையே தொடங்குனோம். அரசு வேலை, மாசம் 2000 ரூபா சம்பளம், ஆறே மாசத்துல ஊதிய உயர்வு, ஓய்வுதியமும் இருக்கு, வாரிசுக்கு சில பல பெனிஃபிட்ஸும் இருக்குனு ராஜ்குமாரோட ஆசைய தூண்டியிருக்கு ஒரு கும்பல்.ராஜ்குமாரும் மனைவி, மகனோட நகையெல்லாம் அடமானத்துல வெச்சி கொஞ்சம் கொஞ்சமா 80000 ஆயிரம் ரூபா வரைக்கும் பணம் சேர்த்து, அத பாவாடை என்ற உறவினர் மூலமா அதிகாரிங்களுக்கு தட்சணைய கொடுத்து தான் இந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்ர வாங்கினத சொல்றாரு.

கொரோனா காலத்துல தன்னோட உடல் நலத்த பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாம முன்கள பணியாளரா வேலை செஞ்சிருக்காரு. ஆனா, பஞ்சயாத்துக்கு ராமலிங்கம்னு புதுசா ஒரு க்ளார்க் வந்ததுல இருந்து எல்லாமே தலைகீழா மாறி இருக்கு, அந்த அதிகாரி அவரோட வீட்டு வேலைய செய்ய சொல்லி ராஜ்குமார பலநாட்கள் துன்புறுத்தியத குற்றம் சாட்டுறாரு ஒரு கட்டத்துல, தன்மானத்தோட எதிர்த்து கேட்டதுக்கு உனக்கு வேலையும் கிடையாது, சம்பளமும் கிடையாதுனு அவர வீட்டுக்கு திருப்பி அனுப்பி இருக்காங்க. நடந்த எல்லா சம்பவத்துக்கும் ஊராட்சி மன்ற தலைவரோட கணவர் அர்ஜூணனும் முக்கிய காரணமா இருந்ததா சொல்லபடுது. அதிகாரிங்க வீட்டுக்கு முறைவாசல் பண்ண சொல்ற அந்த மானங்கெட்ட உத்யோகமே வேண்டாம்ன்ற முடிவுக்கு வந்த ராஜ்குமார் கொடுத்த பணத்த திருப்பி கேட்டு இருக்காரு. அதுக்கு அவரோட உறவினர் பாவாடை சொன்ன பதில் ராஜ்குமார பதற வைச்சிருக்கு.

அரசு அதிகாரிங்ககிட்ட கொடுத்த பணம் திருப்பதி உண்டியல் போட்ட மாதிரி திரும்ப கிடைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லன்னு கையவிரிச்சி இருக்காரு.  தான் ஏமாற்றப்பட்டத உணர்ந்த ராஜ்குமார் தனக்கான நியாயம் கிடைக்குற வரைக்கும் போராட போறத சொல்லி, மாவட்ட நிர்வாகத்துல தன்னோட கோரிக்கைய வைச்சிருக்காரு. கொடுத்த பணம் நிச்சயமா திருப்பி கிடைக்கும்ன்ற நம்பிக்கை ராஜ்குமாருக்கு இருக்கு, ஆனா தப்பு பண்ண அதிகாரிங்களுக்கு தண்டனை கிடைக்குமான்றது சட்டத்தோட கையில தான் இருக்கு.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்