தற்போதைய செய்திகள்

பச்சிளம் பெண் குழந்தையை பேரம் பேசி ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பெற்றோர் - சிவகாசியில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் , பஞ்சவர்ணம் தம்பதியினர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். • அவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் 4-வதாக ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. • அக்குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த குழந்தை இல்லாத ஜார்ஜ் - அயரின் தம்பதியினருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. • இது குறித்து பஞ்சவர்ணம் தாய் அளித்த தகவலின் பேரில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. • போலீசார் குழந்தையை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். • குழந்தையை விற்ற பெற்றோர் பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் , உடந்தையாக இருந்த கிராமப்புற செவிலியர் முத்துமாரி, மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் அஜிதா, குழந்தையை விலைக்கு வாங்கிய அயரின் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். • தலைமறைவாக உள்ளஅயரின் கணவரான நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையார் ஜார்ஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்