தற்போதைய செய்திகள்

திரையில வந்தாலே FIRE-தான் சர்ச்சைகளை கடந்து ஜொலிக்கும் நட்சத்திரம் STR

தந்தி டிவி

மெகாஹிட், அட்டர் FLOP, புகழ்ச்சி, இகழ்ச்சி, சர்ச்சை, சச்சரவு என சினிமாவில் அறிமுகமானது முதல் இந்த நிமிடம் வரை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் பெயர்தான் சிலம்பரசன்...

நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்கள் சினிமாவில் அரிது. அப்படி அரிய வகை நட்சத்திரம்தான் இந்த சிலம்பரசன்....

திரையில் தோன்றினாலே FIRE என புகழும் அளவிற்கு, நடிப்பால் ஏராளமான ரசிகர்களை ஆட்கொண்டவர்..

அறிமுகமான படத்தில் இருந்தே பஞ்ச் வசனங்களாலும், விரல் அசைவுகளாலும் தனி இடம்பிடித்தார்....

மன்மதன், வல்லவன் படைப்புகளை கொடுத்து இளசுகளை தன்பக்கம் ஈர்த்தார்...

விண்ணைத்தாண்டி வருவாயா மூலம் நேசிப்போர் படையை பெரிதுப்படுத்தினார்.....

இவை எல்லாம் சிலம்பரசன் கண்ட புகழ்ச்சி என்றாலும், அவரது மறுபக்கம் சர்ச்சைகளால் நிரம்பியிருந்தன.

ஷூட்டிங்கிற்கு லேட், BEEP SONG, AAA பட தயாரிப்பாளருடனான மோதல், நடிகர் சங்க மோதல் என நீண்டது சிலம்பரசனின் சர்ச்சை...

இதோடு சொந்த வாழ்க்கையிலும் பல மனகசப்புகள்...

சர்ச்சைகள், மனகசப்புகள் ஒருபக்கம், அடுத்தடுத்து பிளாப்கள் மறுபக்கம் என முடங்கினார் சிலம்பரசன்....

உடல் பருமனாக, அவ்வளவுதான் சிம்பு, மார்க்கெட் அவுட் என்ற பேச்சு மேலோங்கின...

அவரது ரசிகர்களும் கொண்டாட காரணம் இல்லாமல் முடங்கிபோய் இருக்க, மீண்டெழுந்தார் சிலம்பரசன்...

கொரோனா ஊரடங்கு மக்களை வீடுகளில் முடங்க வைக்க, சிலம்பரசனை மட்டும் புதிய அவதாரம் எடுக்க உந்தியது...

இந்த மாற்றத்தோடு, மிக குறுகிய நாட்களில் ஈஸ்வரன் படத்தை முடித்து சிம்புவா இது என வாயில் விரல் வைக்க வைத்தார்..

அடுத்து மாநாடு... சிலம்பரசனின் கம்பேக்...

செக்க சிவந்த வானம் பட காட்சியை வைத்து உருவ கேலியை எதிர்கொண்டவர், அதற்கு பதிலடி தரும் விதத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி