தற்போதைய செய்திகள்

ஷரத்தா கொலையில் அடுத்த ஷாக்.. கிரைண்டரில் ஷரத்தாவின் எலும்பை அரைத்து பவுடராக்கிய கொடூர காதலன்

தந்தி டிவி

ஷரத்தா கொலை வழக்கில் தடயத்தை மறைக்க, அவரது எலும்புகளை அப்தாப் அரைத்து பவுடராக்கியதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவை கொலை செய்த அப்தாப், அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான அப்தாப் மீது, 6 ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தாக்கல் செய்தனர். இதில் முக்கிய தகவலாக, தடயங்களை மறைக்க, கொல்லப்பட்ட ஷரத்தாவின் உடல் எலும்புகளை, கிரைண்டரில் அரைத்து அப்தாப் பவுடராக மாற்றியுள்ளதாக போலீசாரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொலை செய்து 3 மாதங்கள் கழித்தே ஷ்ரத்தாவின் தலையை அப்புறப்படுத்தியதாகவும், மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த அப்தாப், அந்த பெண் வீட்டிற்கு வரும்போதெல்லாம், பிரிட்ஜில் இருந்த உடல் பாகங்களை சமையல் அறைக்கு மாற்றியதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்