தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் சர்வர் கோளாறு காரணமாக X-RAY முடிவுகள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுவதால், முடிவுகள் தெரியாமல் நோயாளிகள் அவதிடைந்தனர்.

தந்தி டிவி

அரசு மருத்துவமனையில் சர்வர் கோளாறு காரணமாக X-RAY முடிவுகள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுவதால், முடிவுகள் தெரியாமல் நோயாளிகள் அவதிடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் X-RAY பிரிவில், சர்வர் கோளாறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், நீண்ட நாட்களாக X-RAY முடிவுகள், வாட்ஸ்ஆப் செயலி மூலமாக, மருத்துவர்களுக்கு பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏராளமான நோயாளிகள் X-RAY எடுத்து வரும் சூழலில், நோயாளிகளின் முடிவுகள் சில நேரங்களில் மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் குழம்பிபோய் உள்ளனர். அதேபோல் X-RAY முடிவுகள் நோயாளிகளின் கைகளில் கிடைக்க முடியாத நிலை உள்ளதால், உடனடியாக சர்வர் கோளாறு சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்