தற்போதைய செய்திகள்

9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... தலைமை ஆசிரியரை புரட்டி எடுத்த மக்கள் - அரசு பள்ளியில் அரங்கேறிய அவலம்..!

தந்தி டிவி

விட்டலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, தலைமை ஆசிரியர் சகலகலாதரன் சாக்லேட் கொடுக்கும் சாக்கில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் தாய், கிராம மக்களுடன் பள்ளிக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தலைமை ஆசிரியர் சகலகலாதரனிடம் விசாரணை நடத்தினர். பின்னர், தலைமை ஆசிரியரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும், போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரை தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து அவரை மீட்ட போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதால் போலீசார் தலைமையாசிரியர் சகலகலாதரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு