தற்போதைய செய்திகள்

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் - 2 பேர் கைது... 4 பெண்கள் மீட்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில், மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர், புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கட்டடத்தில், மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சோதனை செய்தபோது, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர் சண்முகசுந்தரம், மேலாளராக பணிபுரிந்த சுதா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததுடன், கட்டடத்திற்கும் சீல் வைத்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களும் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்