தற்போதைய செய்திகள்

உயிர்பலி வாங்கும் கழிவுநீர் தொட்டிகள் - மேலும் ஒரு தொழிலாளி சடலமாக மீட்பு

தந்தி டிவி

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் மேலும் ஒரு கட்டிட தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

கரூரை அடுத்த சுக்காலியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய மோகன்ராஜ், ராஜேஷ்குமார் மற்றும் சிவகுமார் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கட்டிட மேஸ்திரி கார்த்திக் மற்றும் வீட்டின் உரிமையாளர் குணசேகரன் ஆகியோர் மீது தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகுமாருடன் பணிக்கு சென்ற கோபால் என்பவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதே கழிவு நீர் தொட்டியில் இருந்து கோபாலின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்

Chengalpattu Accident செங்கல்பட்டு சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி பயங்கர விபத்து

Chennai Crime டையப்பரில் மறைக்கப்பட்ட ரூ.1கோடி `விபரீதம்’ - சர்வதேச தொடர்பா என கிடுக்கிபிடி விசாரணை

Haryna வேண்டுமென்றே இடித்த கார்.. இழுத்து செல்லப்பட்ட பெண் ரைடர் - குலைநடுக்க வீடியோ

Bank | அடகு வைத்த நகைகளுக்கு பதில் போலி நகைகள்.. பேங்கிலேயே மெகா மோசடி