தற்போதைய செய்திகள்

சீரியல் நடிகர் அர்ணவ் வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு - மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்..!

தந்தி டிவி
• சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. • சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, அவரது மனைவியும், நடிகையுமான திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அர்ணவ் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். • தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்ணவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. • அதில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறியுள்ளார். • திவ்யாவை தாக்கியதாகக் கூறிவது தவறு என்றும், அவர் தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். • இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். • இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது. • இதையடுத்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை