தற்போதைய செய்திகள்

பரபரப்பில் சீனியர்கள்... உற்சாகத்தில் ஜூனியர்கள்... நாளை கூடுகிறது அமைச்சரவை கூட்டம்

தந்தி டிவி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்குப்பின், அமைச்சரவை இலாகாக்கள் மாற்றியமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில், நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. தி.மு.க ஆட்சி, வரும் 7ம் தேதி மூன்றாம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், அதற்கேற்ப பணியாற்றும் வகையில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கவும், புதுமுகங்களை சேர்க்கும்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

அமைச்சர் நாசர் இலாகா வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், செய்தித்துறை டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை இலாகா, சங்கரன்கோவில் ராஜா அல்லது தமிழரசிக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் சிலரது இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS