தற்போதைய செய்திகள்

"தரமற்ற பூண்டுகள் விற்பனை"... வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் - கோபத்தில் சில்லறை வியாபாரி செய்த செயல்

தந்தி டிவி

கடந்த ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் விஎஸ் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரியா தம்பதியினர் வடுகபட்டி வெள்ளை பூண்டு சந்தையில், சில்லறை விற்பனைக்காக மொத்தமாக பூண்டு வாங்கிச் சென்றுள்ளனர். 2 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள வெள்ளைப் பூண்டை 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கிச் சென்ற நிலையில், சில்லறை விற்பனையின் போது பூண்டுகளை வாங்கிய பொதுமக்கள் தரமற்று இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்... இதையடுத்து வாங்கிய பூண்டுகளை திருப்பிக் கொடுக்க மொத்த வியாபாரியைத் தொடர்பு கொண்ட போது, அவர் பூண்டை மாற்றித் தர மறுத்துள்ளார்... மொத்த வியாபாரி அண்ணாமலை டிரேடர்ஸ் திலிப் என்பவரிடம் இது குறித்து முறையிட்ட போது, இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ்-பிரியா தம்பதி வாங்கிய பூண்டுகளை சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்