• மண்டைக்காடு அம்மன் கோவில் சமய மாநாட்டை, ஹைந்தவ சேவா சங்கம் மீண்டும் நடத்த, அறநிலையத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
• கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு நடைபெறுவது வழக்கம்.
• ஆனால் இந்த ஆண்டு இந்து அறநிலையத்துறை சார்பில் சமய மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
• இதற்கு ஹைந்தவ சேவா சங்கம், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஆகியவை தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன.
• இந்நிலையில் நாகர்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து அமைப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
• இறுதியாக பேச்சுவார்த்தை முடிவில், சமய மாநாட்டை வழக்கம்போல் ஹைந்தவ சேவா சங்கமே நடத்த, அறநிலையத்துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.