தற்போதைய செய்திகள்

காரில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்... இளைஞர்களுடன் போலீஸும் சேசிங்.. இணைந்த ஆந்திர போலீஸ்

தந்தி டிவி

காரில் கேட்ட பெண்ணின் அலறல்சத்தம்... இளைஞர்களுடன் போலீஸும் சேசிங்.. இணைந்த ஆந்திர போலீஸ்..அடுத்து நடந்த த்ரில்

திருவள்ளூரில் இளம் பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் பொது மக்கள் உதவியுடன் ஆந்திரா போலீஸால் மீடகப்பட்ட பெண், தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பள்ளிப்பட்டு அருகே நேற்று மாலை காரில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்காரை இளைஞர்கள் பின் தொடர்ந்துள்ளனர். ஆந்திராவை நோக்கி சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் தமிழக போலீசில் புகாரளித்துள்ளனர். கார் சென்ற பகுதி ஆந்திர மாநிலம் என்பதையறிந்த தமிழக போலீசார், ஆந்திர போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின் காரை ஆந்திர போலீசாரும், இளைஞர்களும் துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளனர். விசாரணையில் கடத்தியவர் அத்திமாஞ்சேரியை சேர்ந்த ஜெயக்குமார் என்பதும், மீட்கப்பட்ட பெண் கொடிவசலா பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்பதும் தெரியவந்துள்ளது. ஷர்மிளாவை ஜெயக்குமாரின் நண்பர் ஒருவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததை அடுத்து அவரிடம் சேர்த்து வைப்பதற்காக பெண்ணை கடத்தியிருக்கிறார். இதையடுத்து அவர்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்