தற்போதைய செய்திகள்

வாட்டி வதைக்கும் வெயில் - நீருற்றுகளில் குளித்து மகிழும் மக்கள்

தந்தி டிவி

ஸ்பெயின் நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்ட செயற்கை நீருற்றுகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 104 முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிப்பதுடன், நேற்று முதல் அங்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த வெப்ப அலை நாளை வரை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பொது இடங்களில் அமைக்கப்பட்ட செயற்கை நீருற்றுகளில் பொதுமக்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்