தற்போதைய செய்திகள்

“தமிழ் பாடம் சரியாக வரவில்லை“ - பெற்றோரிடம் தேம்பி தேம்பி அழுத மாணவி எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

தமிழ் பாடம் சரியாக வராததால், சென்னையில், 10ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளிக்கு சென்று ஆங்கில தேர்வு எழுதிய நிலையில், அதன் பின்பு பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பள்ளி ஆசிரியை, மாணவியின் பெற்றோரிடம் தொலைபேசியில் அழைத்து கேட்டபோது, உடல்நிலை சரியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ் பாட தேர்வு நடைபெற இருந்த நிலையில், மாணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் வந்த போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், தமிழ் பாடத்தில் பலவீனமாக இருப்பதாகக் கூறி பெற்றோரிடம் மாணவி அழுதுள்ளார்.

அப்போது அவரை பெற்றோர் ஆறுதல் படுத்தியதாக சொல்லப்படுகிறது. எனினும், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்