தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, பள்ளி மாணவியின் குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த நபர், தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு தாலுகா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் ப்ளஸ் டூ மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த சந்தோஷ் என்ற இளைஞரை, மாணவியின் பெற்றோர் தாக்கியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது ஆதரவாளர்களுடன் சென்று, வீடு புகுந்து மாணவியின் குடும்பத்தினரை தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த மாணவியின் குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்யக்கோரி, மாணவியின் பெற்றோர், அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, உறவினர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குடியாத்தம் சிறையில், தலைமைக் காவலராக பணியாற்றி வரும் நிலையில், போலீசார் குடும்பத்திற்கே பாதிப்பு ஏற்படும் போது போலீசார் வேடிக்கை பார்ப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை